நீ என்னை விட்டு பிரிந்தாலும் உன் நினைவுகள் மட்டும் போதும் பெண்ணே

இந்த முகநூல் பக்கம் காதலர்களுக்கான பக்கம் .. காதல் கவிதைகள் , காதல் வரிகள் மற்றும் நிறைய .. வந்து பாருங்கள்

Monday, 1 September 2014

அப்ரிடி

பதிவிட்டவர் Unknown at 03:12 0 Comments

தயவு செய்து முழுமையாக
படியுங்கள் & பகிருங்கள்
ஷாஹித் அப்ரிடி ........!!
புயல் வேக மட்டை வீச்சில்
பிரசித்தி பெற்றவர்.
ஒரு முறை ஜெயசூரியா வேகமாக
நூறு ரன்களை அடித்த
சாதனையை யாரும் முறியடிக்க
முடியாது என்று நண்பர்களிடம்
சொல்லி கொண்டு இருந்தேன். ஆனால்
சில மாதங்களுகுள்ளகவே அந்த
சாதனையை 16 வயதில் முறியடித்தவர்.
அதுவும் தன்னுடைய முதல் அறிமுக
தொடரில்...
அன்றில் இருந்து இவருடைய
அதிரடி ஆட்டதிற்கு நான்
பலிகடா ஆகிவிட்டேன். நான்
விளையாடி கொண்டு இருந்து கிரிக்கெட்
அணியில் அன்றில்
இருந்து அதிரடி ஆட்டம்
மட்டுமே ஆடுவேன். வெறும் 15 ஓவர்
மட்டும் விளையாடும் அந்த ஆட்டத்தில்
நூறு ரன்களை அடித்தவன் என்கிற
சாதனை எனக்கு சொந்தமானது. சரி..
இப்போ விசயத்திற்கு வருவோம்...
இவர் எந்த
அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ அதே அளவிற்கு இளகிய
மனம் படைத்தவர். இந்தியாவில்
கோடி கோடியாக கிரிக்கெட்
விளையாடி சம்பாரிதவர்கள் எல்லாம்
ஹோட்டல் , கம்பனி என்று தங்களின்
தொழிலை மட்டுமே வளமாக்கி கொண்டார்கள்.
தனக்காக கைதட்டிய
ரசிகனை பற்றி ஒரு முறையும்
சிந்திக்காதவர்கள். இன்று ஓய்வு பெற்ற
பின்பும் எதாவது வருமானம்
வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் ஷாஹித் அப்ரிடி தான்
வாழ்நாளில் சம்பாரித்த பணத்தை எல்லாம்
அவர் பிறந்து வளர்ந்த
கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல்
மருத்துவமனை , மற்றும் தரமான
சாலைகள்
போடுவதற்கு செலவு செய்து உள்ளார்.
இதுவரை அவர் 17 மில்லியன்
டாலர்களை அவர்
செலவு செய்து உள்ளார். இந்திய
மதிப்பில் 77 கோடிக்கும் மேல் ... ஆனால்
இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட்
ஆட்டகாரரர்கள் என்ன செய்ய போகிறார்கள்...
ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட்
அகடமி தொடங்குவார்கள். அதில் புதிய
புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்ச
கணக்கில் பீஸ் வாங்குவார்கள். அவர்களின்
சம்பளத்தில் இருபது சதவீதம் வாழ்நாள்
முழுவதும் கமிசன் பெறுவார்கள்....
இது தானே நடந்து கொண்டு இருக்கிறது.
அப்ரிடியின் மனிதநேய
செயலை கிரிக்கெட் மைதானத்தில்
இருந்து விலகி நின்று பாராட்டுவோம்...


தெரிவிக்க

புதிய பதிவுகளுக்கு

மின் அஞ்சல் மூலம் பெற முகவரியை இங்கு பதிவு செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்க

Name

Email *

Message *

உங்களுக்கு பிடித்த நடிகர்

தங்கள் வருகைக்கு நன்றி
back to top